அர்த்தமற்ற பதவி விலகல்: கனேடிய எதிர்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
ட்ரூடோவின் பதவி விலகலுக்கான அறிவிப்பை அடுத்து அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், "கனேடிய மக்கள், வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயத்திலிருந்து மீண்டு வரும் மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளார்கள்.
மாற்றம் எதுவுமில்லை...
இறுதியாக கனேடிய பிரதமர் பதவியில் இருந்து வெளியேறுகின்ற போதிலும் எதுவும் மாறவில்லை. லிபரல் கட்சியின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், தலைமைப் போட்டியாளரும் ட்ரூடோ, நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு செல்ல 9 ஆண்டுகளாக செய்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கினர்.
Nothing has changed.
— Pierre Poilievre (@PierrePoilievre) January 6, 2025
Every Liberal MP and Leadership contender supported EVERYTHING Trudeau did for 9 years, and now they want to trick voters by swapping in another Liberal face to keep ripping off Canadians for another 4 years, just like Justin.
The only way to fix what… pic.twitter.com/YnNYANTs1y
இப்போது அவர்கள் ட்ரூடோவை போலவே கனேடியர்களை மேலும் 4 ஆண்டுகளுக்கு ஏமாற்றுவதற்காக கட்சி தலைமையில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளனர்.
லிபரல் கட்சியாளர்கள், மேற்கொண்ட சீர்குழைவுகளை சரிசெய்ய பொது அறிவு கொண்ட கன்சர்வேடிவ்களை (எதிர்கட்சியாளர்கள்) தேர்ந்தெடுப்பதுவே ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |