யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த தூதுவர் குழுவினர் (Photos)
யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று மதியம் 1 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழு
பிரான்ஸ், பஹ்ரைன், வியட்னாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்த சந்திப்பில் ஈடுபட்டது.
இதன்போது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தூதுவர் குழு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam