இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டும் - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகமான துயரத்தை நினைவுகூரும் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அனுஷ்டிப்பு வாரத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இணை அனுசரணை வழங்கிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகியது.
அத்துடன் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்குப் பதவிகளை வழங்கியுள்ளதுடன் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் விசாரணை அதிகாரியைக் கைது செய்துள்ளது.
இலங்கை அரசு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து பிரித்தானிய அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பது அங்கு நிரந்த அமைதியை ஏற்படுத்தப் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam