பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! உண்மை தெரியாமல் போராட்டக்காரர்கள் செய்த செயல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மல்வான மாளிகை தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ‘அரகலயா’ போராட்டத்தின் போது இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது என்பதை அறியாமல் எரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்த மாளிகையை நீதி அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,“மல்வானை சொத்துக்கு எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பதை நான் செய்தித்தாள்கள் மூலம் அறிந்ததும், அதை நீதியமைச்சிடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மறுநாள் சமர்ப்பித்தேன்.
அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான செயல்முறை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இது நீதித்துறை அமைச்சகத்தால் கையகப்படுத்தப்படும்.
துரதிர்ஷ்டவசமாக, அரகலயா ஆர்வலர்கள் அதைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஒருவேளை அது இப்போது அரசின் சொத்து என்பது தெரியாமல் அதை தீயிட்டுருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
