ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டை கோரும் நீதியமைச்சர்
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பொய்யான தகவலை வெளியிட்டு தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியமைக்காக 14 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டைச் செலுத்துமாறு கோரி, நீதியமைச்சர் அலி சப்றி, தனது சட்டத்தரணி ஊடாக பிரமாண பத்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
காலி பத்தேகமை பிரதேசத்தை வசித்து வரும் ஆனந்த லேனரோய் என்ற நபருக்கே இந்த பிரமாண பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கான பிரஜைகள் அமைப்பு கடந்த 10 ஆம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கொன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபருக்கு நீதியை வழங்குமாறு அறிவித்து, நீதியமைச்சர், மேல் நீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் அனுப்பி இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜயவர்தன ஊடாக இந்த பிரமாண பத்திரத்தில் 14 நாட்களுக்கு ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், ஆனந்த லேனரோய்க்கு எதிராக வழக்கு தொடரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 30 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
