மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து: நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் மறைப்பது சட்ட ரீதியாக குற்றமாகும் என்று நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் மறைப்பது சட்ட ரீதியாக குற்றமாகும்.
பிரதான வழக்கு
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய தகவல்கள் தெரிந்திருந்தால் அவை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே வழக்கு தொடர்பான காரணிகள் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிப்பதற்கான உரிமை எமக்கு கிடையாது என கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
