நீதி அமைச்சர் ஒட்டுமொத்த தமிழினத்தையும் மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட ஒருவர்: தவராசா கலையரசன்
காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டுச் செயற்படுகின்ற ஒருவர் என்பதுடன் தமிழ்களுடைய உயிர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியா? என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காணாமல் போனோரின் உறவுகளுக்கு அரசினால் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் யோசனையை நீதி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இன்று(15) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் நீதி அமைச்சர் காணாமல் போனோர் தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த யோசனை ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாகும். அத்துடன் தமிழர்களை இவர்கள் எவ்வாறு எந்தளவுக்கு வைத்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படுத்தியிருப்பது ஒரு வேதனையான கவலையான விடயம்.
அதேவேளை தமிழ்களுடைய உயிர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில் இவர்கள் கையாளுகின்ற விடயத்துக்கு நாங்கள் மனவேதனையுடனான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் மக்கள் இந்த நாட்டில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அரசாங்கம் அதுசம்மந்தமாக எந்தவிதமான நியாயமான ஒரு விடையங்களையும் கையாள்வதற்குத் தயாரில்லை என்ற அடிப்படையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எமது உறவுகள் நீண்டகாலமாக அவர்களது நியாயங்களைப் பெற்றுத்தரவேண்டும் எனச் சர்வதேசத்தைக் கோரி வருகின்றனர்.
இவ்வாறு சர்வதேசத்தைக் கோரிவரும் இந்த கால கட்டத்தில் நீதி அமைச்சர் முன்வைத்திருக்கின்ற விடயம், எமது தமிழினத்தை மிக மோசமாக இந்த அரசாங்கம் கையாளுகின்றது என்பதை காட்டிநிற்கிறது.
காணாமல் போன உறவுகள் மற்றும் மனித உயிர்களைப் பறிகொடுத்த சமூகத்தை மோசமான ஒரு சூழலுக்கு இட்டுச்செல்லும் என்பதுடன், மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு எனத் தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு மனித நேயத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதைக் காட்டுகின்றது.
எனவே இவ்வாறு நாட்டில் ஒரு நீதி அமைச்சர், ஒட்டுமொத்த தமிழினத்தை
மலினப்படுத்துகின்ற விடயமாகச் செயற்படுகின்ற நடவடிக்கையைக் கைவிடவேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam