பிரச்சினை அல்ல தீர்வே முக்கியம் - நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி

Law and Order Ministry of justice Sri lanka Harshana Nanayakkara
By Rakesh Dec 29, 2025 07:15 AM GMT
Report

சகல விடயங்களுக்கும் குறைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து ஜனநாயகம், தனி மனித உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மீதான விமர்சனங்கள் புதிய சட்டத்தில் உள்வாங்கப்படாது. குறைபாடுகளை முன்வைப்பவர்கள் சிறந்த பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

நீதி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் திடீர் மாற்றம் - குழப்பத்தில் அரசியல்வாதிகள்

மகிந்தவின் திடீர் மாற்றம் - குழப்பத்தில் அரசியல்வாதிகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் ஆறு மாத காலத்தை வரையறுத்து பயங்கரவாதத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் தனிமனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தால் நாங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக அம்சங்கள் மற்றும் மனித உரிமைகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்றுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம்.

பிரச்சினை அல்ல தீர்வே முக்கியம் - நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி | Justice Minister Harshana Nanayakkara Assures

இதற்கமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச குலரத்ன தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கடந்த அரசு தயாரித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி

வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி

புதிய சட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து ஜனநாயகம், தனி மனித உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மீதான விமர்சனங்கள் புதிய சட்டத்தில் உள்வாங்கப்படாது. குறைபாடுகளை முன்வைப்பவர்கள் சிறந்த பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

புதிய சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். சகல விடயங்களுக்கும் குறைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்றார்.

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US