காணமலாக்கப்பட்டோருக்கான நீதி கானல் நீராகவே உள்ளது: அருட்தந்தை மா.சத்திவேல் ஆதங்கம்

Tamils Sri Lanka
By Shan Feb 27, 2024 02:13 PM GMT
Report

காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது எனவும், காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

காணமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்பில் அவர் இன்று (27.02.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதி கேட்டு தொடர் போராட்டம் ஆரம்பித்து.

கட்டாயமாக்கப்படும் நடைமுறை: உயர் நீதிமன்றில் அறிவிப்பு

கட்டாயமாக்கப்படும் நடைமுறை: உயர் நீதிமன்றில் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவை

அதன் ஏழாவது நிறைவு தினத்திலே மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்ட பேரணியை நடத்தி ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

கோரிக்கைகள் நியாயமானது. மேலும், உறவுகளை பறிகொடுத்த வலிகளோடு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வடகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் தமது முழுமையான ஆதரவை நடத்துவதோடு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையை வலியுறுத்துகின்றது.

காணமலாக்கப்பட்டோருக்கான நீதி கானல் நீராகவே உள்ளது: அருட்தந்தை மா.சத்திவேல் ஆதங்கம் | Justice For The Disappeared

இந்நிலையில், யுத்த காலத்தில் தமது உறவுகளை தேடி அலைந்த அவர்களின் உறவுகள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அமைப்பு ரீதியில் நீதி கேட்டு தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டங்களை நடாத்தியவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தன் உறவுகளை தேடி தேடித் மன வேதனைக்கு உட்பட்டவர்கள் பல்வேறு நோய் தாக்கத்தின் காரணமாகவும், வயது மூப்பினாலும், இரத்த உறவுகளின் பிரிவினாலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இதனை இயற்கை மரணம் என கடந்து விட முடியாது. இலங்கை அரசு நீதி மறுத்து இவர்களை கொலை செய்தது என்றே அடையாளப்படுத்தல் வேண்டும்.

இதற்கமைய இனியும் தொடர சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமை பேரவையும் இடமளிக்கக் கூடாது என்பது எமது உருக்கமானதும் அளுத்தமானதுமான வேண்டுகோள்.

அத்தோடு, ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசின் செயற்பாடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல வடகிழக்கிற்கு வெளியே நீதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் நம்பிக்கை இல்லை.

சமூக வலைத்தளங்களுக்கு அச்சப்படும் அரசாங்கம் : திரைமறைவில் இரகசிய சதித் திட்டம்

சமூக வலைத்தளங்களுக்கு அச்சப்படும் அரசாங்கம் : திரைமறைவில் இரகசிய சதித் திட்டம்

முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்

காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.

இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு பாரதூர சம்பவங்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து அதன் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், அவ்வாறான நிகழ்வுகள் மீழ் நிகழ்வதை தடுப்பதற்கு என 1956 இருந்து இதுவரை 36 வரை ஆணை குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் குறித்த ஆண குழுக்களின் அறிக்கைகள் முழுமையாக மக்கள் முன் வைக்காது மறைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சித்துள்ளனர்.

காணமலாக்கப்பட்டோருக்கான நீதி கானல் நீராகவே உள்ளது: அருட்தந்தை மா.சத்திவேல் ஆதங்கம் | Justice For The Disappeared

அது மட்டுமல்ல ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் துணிவு இருக்கவில்லை. காரணம் உண்மையை மூடி மறைத்து அரசியல் குளிர் காய்வதே அவர்களின் நோக்கம். அவ்வாறே யுத்தம் முடிவற்றதன் பின்னர் காணமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இதற்கமைய குறித்த ஆணைக்குழுக்கள் நியாயமான பரிந்துரைகளை முன் வைத்த போதும் அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்கள் துணியவில்லை.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவி உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டப் போவதாக அறிவிக்கலாம். இதற்கு வலிந்து காணாமலாக்கட்ட உறவுகளின் அமைப்போ நாமோ உடன்பட போவதில்லை என உரத்து கூறுகின்றோம்.

ஆதலால் இச்சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், இலங்கை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறப்படுகின்ற உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தேவையை நிறைவேற்றலாமே தவிர அதன் மூலம் எதிர்பார்க்கும் நீதியை அடைய முடியாது என்பதே உண்மை.

சமூக வலைத்தளங்களுக்கு அச்சப்படும் அரசாங்கம் : திரைமறைவில் இரகசிய சதித் திட்டம்

சமூக வலைத்தளங்களுக்கு அச்சப்படும் அரசாங்கம் : திரைமறைவில் இரகசிய சதித் திட்டம்


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

எனவே சர்வதேச உதவி அமைப்புகளும்,நலன் விரும்பிகளும் வலிகளோடு வாழும் உறவுகளின் அமைப்பால் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

காணமலாக்கப்பட்டோருக்கான நீதி கானல் நீராகவே உள்ளது: அருட்தந்தை மா.சத்திவேல் ஆதங்கம் | Justice For The Disappeared

தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்திலும், யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐ. நா மனித உரிமை பேரவையும் இலங்கை ஆட்சியாளர்களை இனியும் நம்பக் கூடாது என்பதோடு எனது வாலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவசர உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேரவையிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வதோடு யுத்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமாறும் தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இன அழிப்பினை சர்வதேசம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது என்பது அதனை அங்கீகரிப்பதாக அமைந்து விடுகிறது.

ஆதலால் அதனை தடுப்பதற்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US