இந்திய மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதிகோரி தங்கச்சி மடத்தில் உண்ணாவிரத போராட்டம்
இந்தியா - கோட்டை,பட்டிணத்தில் மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த 4 மீனவர்கள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகராஜ், செந்தில் குமார், சாம்சன் டார்வின் , மெர்சியா ஆகிய நான்கு மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் உயிரிழந்தனர்.
இறந்தவரின் உடலை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களிடம் உடல்களை ஒப்படைத்துள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அதேபோல் இலங்கையில் நடைபெற்று வரும் மீனவர்கள் விசாரணைக்குழு ஆணையத்தை கலைத்து விட்டு இந்தியாவில் விசாரணை ஆணையம் அமைத்து உயிரிழப்புக்கு காரணமான இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் மீறி வரும் இலங்கை அரசை கண்டித்தும்,இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ராமேஸ்வரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் தலைமையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam