மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் 103 பேர் காயம் - 55 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் (photo)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களால் 103 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 55 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
ஜுலை 9 போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்து நேற்றைய தினம் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.



