உலகின் அதிக வெப்பமான நாள் தொடர்பில் வெளியான தகவல்
உலக அளவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3ஆம் திகதி (03.072023) பதிவாகியுள்ளது.
இந்த விடயமானது அமெரிக்காவின் தேசிய ஓசியானிக் மற்றும் வளி மண்டல திணைக்களத்தின் (National Oceanic and Atmospheric Administration (என்.ஓ.ஏ.ஏ) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜூலை 3ஆம் திகதி காற்றின் வெப்பநிலையானது, 2 மீட்டர் உயர்ந்துள்ளதுடன், பூமியை மேற்பரப்பு வெப்பநிலையின் அளவு 66.62 டிகிரி பாரன்ஹீட் (17.01 டிகிரி செல்சியஸ்) ஆக பதிவாகியுள்ளது.
அதிக வெப்பமான நாட்கள்
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ரோபர்ட் ரோஹ்டே கூறுகையில், சுற்றுச்சூழல் கணிப்புக்கான தேசிய மையத்தின் தரவுகளின்படி, கடந்த 3ஆம் திகதி பூமியில் பதிவான சராசரியான வெப்பநிலையானது, பூமி வரலாற்றில் அதிகமான வெப்பமான நாளாக மாறியுள்ளது.
எல் நினோ (El -nino ) (பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம்) மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக மாறியுள்ளது.
அடுத்து 6 வாரங்களில் இன்னும் அதிக வெப்பமான நாட்களைப் பார்க்கலாம் என கூறியுள்ளார்.
வெப்பநிலை பதிவு
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும், ஆண்டும், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் அதிகபட்சமாக 62.46 டிகிரி பாரன்ஹீட் (16.92 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஜூலை 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் கனடாவில் 13 நகரங்கள், வட மேற்கு கனடா மற்றும் பெருவில் முன்பைவிட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் மெட்போர்ட், ஒரேகான் முதல் டம்பா, புளோரிடா வரை வெப்பநிலை அதிகமாக இருந்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து 9ஆவது நாளாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |