தமிழ் அரசியல் தலைவர்களுடன் அமெரிக்க தூதர் கலந்துரையாடல்(Video)
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
இதன் போது தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் கேட்டு அறிந்து கொண்டதுடன் தமிழ் மக்களின் அன்றாடம் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் அரசியல் தலைவர்களினால் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், பௌத்தமயமாக்கல், காணிஅபகரிப்பு,அரசாங்கத்தின் பிழையான வரிக்கொள்கை மூலம்
வைத்தியர்கள், புத்தியீவிகள் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி
வருகின்றனர் எனவும் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த விஜயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அவர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Met with Governor of the Northern province P.S.M. Charles to hear about social economic challenges & opportunities and her priorities for the province, and how we can further support the development efforts in the North. #USSriLanka75 pic.twitter.com/u8eqn6b0dU
— Ambassador Julie Chung (@USAmbSL) August 23, 2023
Proud to see the impact of our @USAIDSriLanka Climate Change Adaptation Project helping livelihoods of local communities during my visit to Carbon Blueprint. With US-funding, Carbon Blueprint cultivates seaweed along the coastlines, aiming for Sri Lanka to be a pioneer in the… pic.twitter.com/x2V1HFXwiq
— Ambassador Julie Chung (@USAmbSL) August 23, 2023



