மகிந்தவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு்ள்ள அமெரிக்க தூதர்
இலங்கைக்கான, அமெரிக்கத் தூதர் ஜூலி சங் (Julie Chung) சிறிலங்கா பொதுஜன பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம் (14) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, ஜூலி சங் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடல்
தமது கட்சி உறுப்பினர்களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவரது விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர், தனது விஜயத்தின் போது, கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜெயந்த கெட்டகொட, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
