இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் வெளியிட்டுள்ள காணொளி
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பிலும், தன்னைப்பற்றியும் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளியில் அமெரிக்கத் தூதுவர் கூறும் விடயங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கம் மற்றும் ரொம்ப நன்றி உள்ளிட்ட தமிழ் வார்த்தைகளையும் உச்சரித்துள்ளார்.
?? & ?? have a lot in common – from our #democratic values to our shared commitment to a safe & prosperous Indo-Pacific. As the new US Ambassador to ??, I’d like to introduce myself. Check out this video to hear why I’m so excited to represent ?? on this beautiful island. pic.twitter.com/dKbTa9uLv9
— Ambassador Julie Chung (@USAmbSL) February 18, 2022
முதலாம் இணைப்பு
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் நேற்றைய தினம் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அந்த பதிவில் மேலும், இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென்னை சந்தித்திருந்தேன்.
I met with @SecBlinken before boarding the plane to Colombo. As I told him, I am truly honored to be the next US Ambassador to ?? & I look forward to working with the GoSL, civil society & people like you to build our economies, explore our shared values & strengthen ?? ?? ties. pic.twitter.com/3Ce4wvbCPx
— Ambassador Julie Chung (@USAmbSL) February 17, 2022
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் நான் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியிருந்தேன்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.