சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து:நீதிச் சேவைகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
நீதித்துறையை இலக்கு வைத்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் மோசமான செயற்பாடுகள் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக நீதிச் சேவைகள் சங்கம் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதித்துறை சேவைகள் சங்கத்தின் தலைவர் பசன் அமரசேன மற்றும் செயலாளர் சுரங்க முனசிங்க ஆகியோர் கையொப்பமிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
திட்டமிடப்பட்ட செயற்பாடுகள்
நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் நீதிபதிகள் மீது பொய்யான மற்றும் ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
மேலும் அவை சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பரப்ப பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சமீபத்திய முயற்சிகள் குறித்து நீதிச் சேவைகள் சங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளது.
நீதிமன்றம், நீதித்துறை அதிகாரம் அல்லது நிறுவனத்தை அவமதிப்பது மற்றும் நீதிபதிகளை அவமதிப்பது சிறைத்தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்.
பொய்யான மற்றும் ஆதாரமற்ற விமர்சனங்களைப் பரப்புவதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் , இலக்கு வைக்கப்பட்ட மற்றும் மோசமான செயற்பாடுகள் குறித்து நீதிச் சேவைகள் சங்கம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை பாதிக்கும் முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிச் சேவைகள் சங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam