மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்
மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிய பிரதம நீதியரசர் பீரித்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தற்போது தொடரப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் தொடரப்படவுள்ள அனைத்து வழக்குகளையும் விரைவாக பரிசீலனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு பயனளிக்கும் சேவையை வழங்குவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் முறையில் விரைவாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதம நீதியரசரான ப்ரித்தி பத்மன் சூரசேனவை மரபு ரீதியாக வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்ட போது இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் உச்ச நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், நீதவான்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ரஜீவ அமரசூரிய ஆகியோரும் புதிய பிரதம நீதியரசரின் பணிகளை பாராட்டி கருத்து வெளியிட்டிருந்தனர்.





பிரித்தானிய குடிமக்களின் வரிப்பணத்தில் வாழும் 1.3 மில்லியன் புலம்பெயர்ந்தோர் - நிதியை நிறுத்த தலைவர்கள் அழுத்தம் News Lankasri
