வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் செல்லாக் காசாக மாறியிருக்கின்றது! சிவஞானம் சிறீதரன் (Video)
“வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் செல்லாக் காசாக மாறியிருக்கின்றது” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
“குருந்தூர் மலையில் எந்தவித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பின்னரும் அங்கு மிகப்பெரிய விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலே நீதிமன்றங்கள் செல்லுப்படி அற்றவை. நீதிமன்றங்களுக்கு செல்வாக்கு இல்லை. நீதித்துறை முடக்கப்பட்டுள்ளது. நீதியினுடைய நியாயாதிக்கம் தென் பகுதியில் உள்ள சில நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருக்கின்றதே தவிர வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் அல்லது அந்த நீதிபதிகளினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் செல்லாக் காசாக மாறியிருக்கின்றது. அல்லது அந்த நீதிபதிகள் செல்லாக் காசாக மாறியிருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே இருக்கின்ற நீதிமன்றங்கள் எல்லாவற்றிக்கும் ஒரே நீதியும், நீதிபதிகள் பிறப்பிக்கும் சட்டங்களை எல்லோரும் மதித்து நடப்பவர்களாக இருந்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிபதி பிறப்பித்த சட்டத்தின் ஊடாக குருந்தூர் மலையில் நடக்காது தடுத்திருக்க முடியும்.
அவ்வாறு இந்த மண்ணில் நடக்கவில்லை. ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்கள், நீதிபதிகள் இந்த நாட்டினுடைய நீதிமன்றகள், நீதிபதிகளாக ஏற்றுகொள்ளப்படவில்லை. என்பதை சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துகூற விரும்புகின்றேன்.” என்றார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை இக்காணொளியில் காணலாம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
