தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் சற்று முன் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்
புதிய இணைப்பு
தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தேன்னக்கோன் தாக்கல் செய்த ரிட் மனுவினை, விசாரணைக்கு எடுக்காது மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.
தேசபந்து தென்னக்கோன் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு இன்று..
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத தேசபந்து தொடர்பில் தீர்ப்பு ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்பட உள்ளது.
இத்தகைய பின்னணியில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேக நபர்களும் தங்களை கைது செய்வதைத் தடுக்கக் கோரி ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று அறிவித்துள்ளது.
ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணை
அதன்படி, முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை ஆறு நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவர்களின் ரிட் மனுக்கள் 21 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன.
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரைக் கண்டுபிடிக்க ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
