தயாசிறியின் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தடையின்றி கடமையாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்தக் கட்சிக்கு உத்தரவிடக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(06.02.2026) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த உத்தரவு இன்றைய தினம் (06) அறிவிக்கப்படவிருந்த போதிலும், அதனை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளரான தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, குறித்த பதவியில் தம்மால் எந்தவித இடையூறுகளும் இன்றி கடமையாற்றுவதற்கு அவசியமான கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam