ஊடகவியலாளர் கோகுலதாசனிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் 7ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (27) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
கடந்த 2020.11.28ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் கோகுலதாசன் ( 07.03.2022) பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தவணை நடைபெற்ற போது இவருக்கு நீதிபதி இரண்டு இலட்சம் சரீரப் பிணை வழங்கியதோடு,ஒவ்வொரு மாதமும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் 13.06.2022 அன்று நீதிமன்றத்தில்
விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டமை
குறிப்பிடத்தக்கது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
