சுகாதார சீர்கேடான உணவகத்திற்கு 05 வருடத்தின் பிறகு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு
சுகாதார சீர்கேடு தொடர்பில் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அசைவ உணவகம் ஒன்றிற்கு சுமார் ஐந்து வருடங்களின் பின் 25000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு 2018ம் ஆண்டு, திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரினால் சுகாதார சீர்கேடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கானது நீதிமன்றில் தொடர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டு கடந்த 05 வருடங்களாக நிலுவையில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் (16.15.2023) வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேலதிக நீதவான், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் உணவக உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் உணவக உரிமையாளரிற்கு 25,000/= தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |