தமிழர் என்பதால் நீதிபதி இளஞ்செழியனை புறக்கணித்த அநுர!
தற்போதைய அரசாங்கமும் தமிழர் தரப்பிலே சில தவறுகளை விடுகின்ற வாய்ப்புக்களை உருவாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், உதாரணமாக சொல்லப்போனால் நீதிபதி இளஞ்செழியனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அவர் சகல தகமைகளும் இருந்தது.
ஆனால் அவர் ஓய்வு பெற்றுள்ளார் என்ற காரணத்தை கூறி ஜனாதிபதி அநுர அவரைப் புறக்கணித்துள்ளார்.
ஆனால், அந்தக் காலத்தில் அவர் ஓய்வு பெறவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்திச் சொல்ல முடியும்.
இளஞ்செழியன் ஒரு தமிழன் என்ற ரீதியில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே, இளஞ்செழியனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆக்குவதற்கு அநுர விட்ட தவறை மீள எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
