ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அலைபேசியும் பறிமுதல் : கிண்ணியாவில் சம்பவம்
கிண்ணியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டதோடு, ஊடகவியலாளர் ஒருவரது அலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று(23) நடந்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியைச் சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒரு ஊடகவியலாளரின் அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியும் காடையர்களால் பறிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களால் சேகரிக்கப்பட்ட காணொளிகள் மற்றும் படங்களை ஆர்ப்பாட்டத்தின் போது அமைதி இன்மைக்கு எதிராகச் செயற்பட்ட காடையர் கும்பலினால் அழிக்கப்பட்டதோடு உயிர் தப்பி ஓடி சென்றது விசேட அம்சமாகும்.
இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது .
கிண்ணியாவில் நேற்றைய தினம்(23) இளைஞர் குழு ஒன்றினை அரசியல்வாதிகள் இருவர் இயக்கியதோடு, கிண்ணியாவில் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்துள்ளார்கள்.
குறித்த அமைதி இன்மைக்கு அரசியல் தலைவர்களே காரணம்.
அண்மைக்காலமாகச் செய்தி சேகரிக்கச் செல்கின்ற ஊடகவியலாளர்கள்
தாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

