அரச நிகழ்ச்சியொன்றின் காணொளியை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கைது (video)
அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காணொளியை வெளியிட்டதாக கூறி ஆறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பம் தொடர்பில் 6 பத்திரிகையாளர்கள் கடந்த 3ஆம் திகதி இரகசிய உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானின் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட்(71), அரச நிகழ்ச்சி ஒன்றில் தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரச நிகழ்ச்சியொன்றில், நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட் அவரது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது அங்குள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளியை வெளியிட்ட ஊடகவியலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ) கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
