ஊடகவியலாளர்களுக்கு இருண்ட யுகம்! : அரசு மீது குற்றச்சாட்டு
தற்போதைய அரசின் கீழ் ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இருண்ட யுகம் ஒன்று உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசு தொடர்பில் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை, சமூக
செயற்பாட்டாளரான செஹான் மாலகே கைதுசெய்யப்பட்டமை போன்றவை இருண்ட யுகத்தையே
நினைவுப்படுத்துகின்றது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.