ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி நிகழ்வு
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி கடந்த 9ஆம் திகதி தனது 62ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று யாழ். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.
[4FSHPV8 ]
கொக்குவிலில் தகனம்
இந்த நிகழ்வில் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பட்டாளர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரைகளும் வழங்கினர். பாரதியின் அழிக்கப்பட முடியாத வரலாற்றுத் தடங்களை நினைவு கூர்ந்து தமது உணர்வுகளைப் பலரும் அஞ்சலி உரையினூடாக வெளிப்படுத்தினர்.
இறுதிக்கிரியைகளின் பின்னர் அவரது புகழுடல் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
