ஊடகவியலாளர்களுக்கான இலவச பிரயாணச் சீட்டு தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாணச் சீட்டு (பேருந்து பாஸ்) நடைமுறையை மீண்டும் உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும், ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அண்மையில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தன.
இச்சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு நடைமுறை கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை
அந்த வகையில், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளரை தொடர்புகொண்டு இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு நடைமுறையை உடனடியாக கொண்டு வந்து அதை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
“ஊடகவியலாளர்கள் எவ்வித இலாபங்களுமின்றி சமூக நோக்கை முன்நிறுத்தி தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றவர்கள். அவர்கள் தங்களின் நேரம், காலம், பணம் போன்றவற்றுக்கு மேலாக தனது உயிரையும் தியாகம் செய்து ஊடகப் பணியை தங்கு தடையின்றி மேற்கொண்டு வருபவர்களாக இருக்கின்றனர். அவர்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுப்பதில் நான் என்றும் முன்னிற்பேன்” என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்டு வந்த இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு நடைமுறையை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை வழங்காமல் இடை நிறுத்தியிருந்தமையும், அதை மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை புதிய ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
