யாழ் வடமராட்சி நெல்லியடி பகுதி ஊடகவியலாளர் கைது

Jaffna Journalists In Sri Lanka Tamil
By Erimalai Dec 27, 2023 04:11 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி பகுதியை சேர்ந்த பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊடகவியலாளரும், பணிப்பாளருமான சாந்தலிங்கம் வினோதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

பிரதேச செயலர் தலைமையில் ஒன்றுகூடல்

கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வல்லிபுரம் குருக்கட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டுவரும் அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் ஒன்றுகூடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ் வடமராட்சி நெல்லியடி பகுதி ஊடகவியலாளர் கைது | Journalist Arrested In Jaffna

இதன்போது குறித்த அன்னதான மண்டத்தை பராமரித்துவரும் பத்திரிகையாளரின் தந்தையான சாந்தலிங்கம்,  குறித்த அன்னதான மண்டபத்தை நாம் பராமரிப்பு வருகின்றோம். நீங்கள் அந்த வகையில் எமக்கு சொல்லாமல் இவ்வாறு கூட்டம் நடாத்தமுடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கூட்டம் நடந்துகொண்டிருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதன் காரணமாக பதில் பிரதேச செயலாளர், “நான் பிரதேச செயலாளர். எனக்கு அதிகாரம் உண்டு.” என்று கூறி தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறியதால் பருத்தித்துறை பொலிஸார் ஊடகவியலாளரை கைது செய்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை

நீதிமன்றில் வழக்கு

இது தொடர்பில் பதில் பிரதேச செயலாளர் சிவசிறியை கருத்து தெரிவிக்கையில்,

யாழ் வடமராட்சி நெல்லியடி பகுதி ஊடகவியலாளர் கைது | Journalist Arrested In Jaffna

இது தனது பிரதேசம். மக்களின் முறைப்பாட்டை அடுத்து தான் அங்கு சென்றேன். குறித்த அன்னதான மண்டபம் தனியாரால் பராமரிக்கப்பட்டாலும் பிரதேச செயலாளர் என்ற அடிப்படையில் தனக்கு எங்கும் செல்ல அதிகாரம் உண்டு.

குறித்த மண்டபம் மக்களின் பணத்தில் கட்டப்பட்டது. இதே வேளை குறித்த ஆலயம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு ஒன்று உள்ளது” என்றார்.

எனினும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஒருதரப்பிற்கு மட்டும் அறிவித்து குறித்த கூட்டத்தை நடாத்தியதாக ஊடகவியலாளர் தரப்பால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US