ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி விஜயம்
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் நேற்று(25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
முழுமையான அதிகாரங்கள்
இதில் விசேடமாக விஞ்ஞானம் ஐ.சி.டி போன்ற பாடங்களுக்கு அதிகமாக பற்றாக்குறை நிலவுகின்றது. இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். ஆனால் 35 புதிய ஆசிரியர்களே திரும்பி வந்துள்ளனர்.
இதேபோன்று முல்லைத்தீவு துணுக்காய் வலயம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநருக்கே இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது.
எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







