ஜோசப் ஸ்டாலினும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவரே! - டிலான் எம்.பி. குற்றச்சாட்டு
"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin)" என விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dilan Perera).
அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"எமது இராணுவத்தினர் மக்களைக் கொன்றனர் எனக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின்.
அவர் புலிகளின் கட்சியைச் சேர்ந்தவர். அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்விக் கட்டமைப்பைக் குழப்புகின்றனர்" - என்றார்.
அதேவேளை, "பாடசாலைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு அதிபர்களுக்கு, பொலிஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்க முடியாது.
வலயக்கல்விப்
பணிப்பாளர் தீர்மானமொன்ற எடுக்கும்வரை அதனை ஒப்படைக்கமாட்டோம்" என்று அதிபர்,
ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri