உலகக்கோப்பையில் தொடர் நாயகன் யார் - ஜோஸ் பட்லரின் அதிரடி பதில்
நடப்பு உலகக்கோப்பையில் தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியில் சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்களும் தொடர் நாயகர்கள் ஆகலாம்.
இங்கிலாந்து கேப்டன் பட்லர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தான் இந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகன் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்னில் நாளை இடம்பெறவுள்ளது.
உலகக்கோப்பையில் தொடர் நாயகன் யார்?
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்பாக சிறப்பு உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், நடப்பு உலகக்கோப்பையில் தொடர் நாயகன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'சூர்யகுமார் யாதவ் தான் இந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் அதீத சுதந்திரத்துடன் விளையாடுவர் என்று நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட நட்சத்திரங்கள் நிறைந்த வரிசையில் அவர் நம்ப முடியாத அளவிற்கு கண்களை கவர்ந்துள்ளார். அவர் ஆடிய விதம் ஆச்சரியமாக இருக்கிறது' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உலகக்கோப்பையில் தொடர் நாயகர்கள் பட்டியலில் சாம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் தனது விருப்பமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.




