இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக விரும்பிய ஜோன்டி ரோட்ஸுக்கு ஏமாற்றம்
இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி ரோட்ஸை இணைக்கவேண்டும் என்ற கௌதம் கம்பீரின் பரிந்துரையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏற்கவில்லை.
இந்த முடிவு, தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ஜொன்டி ரோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்திய கிரிக்கெட் நிர்வாகம், வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாததும் காரணமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக அழுத்தம்
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அவருக்கு உறுதுணையாக அபிசேக் நாயர் மற்றும் ரியான் டென்டஸ்காட்டே ஆகியோரை துணைப் பயிற்சியாளராகவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்னே மோர்கலையும் பரிந்துரை செய்தார்.
அதேபோல் களத்தடுப்புப் பயிற்சியாளராக ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
எனினும், தற்போது இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்படும் டி திலீப் சிறப்பாக செயற்படுவதால், இந்த பரிந்துரையை இந்திய கிரிக்கட் நிர்வாகம் ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி திலிப்பின் செயற்பாட்டில் கம்பீருக்கும் திருப்தியுள்ளதால், அவரும் ஜொன்டி ரோட்ஸ் விடயத்தில் இந்திய கிரிக்கட் நிர்வாகத்துக்கு மேலதிக அழுத்தம் கொடுக்க முயற்சிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |