கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கூட்டுப்பயிற்சி நிறைவுக்கு வந்தது
திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் இலங்கை, அமெரிக்க மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் படைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வந்த கூட்டுப்பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, அமெரிக்கக் கடற்படை மற்றும் ஜப்பான் சுயேற்சை பாதுகாப்பு சமுத்திரப்படைக்கு இடையே இந்த பயிற்சிகள் கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் திருகோணமலை துறைமுகம் மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுத்து வந்தன.
இந்தப் பயிற்சிக்கு காரட்–21 எனப் பெயரிடப்பட்டிருந்தது. நாடுகளின் வலயப் பகுதிகளில் சமுத்திரப் பிரதேசத்தில் ஏற்படுகின்ற ஆபத்துக்களைச் சமாளிப்பது, வலய நாடுகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பயிற்சிகள் ஆழ்கடலிலும், கரையோரத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இப்பயிற்சிகளுக்காக இந்த மூன்று நாடுகளினதும் ஹெலிகொப்டர்கள், கப்பல்கள் எனப் பல உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri