போலி கல்விச் சான்றிதழை சமர்ப்பித்து பொலிஸ் சேவையில் இணைந்த நபர்
போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவக்கச்சேரியில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர்
சாவக்கச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டுள்ளதுடன் கல்வி தகுதிக்கு தேவையான கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத அவர், தேர்ச்சி பெற்றது போன்று கல்விச்சான்றிதழை மாற்றியுள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த 2012 ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ளார். அவரது கல்விச்சான்றிதழ் போலியானது என தெரியவந்த போது, அவர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கடமைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் பொலிஸ் சேவையில் இருந்து விலகி சென்றதாக அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து எனவும் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
