மகிந்த அபிவிருத்தி செய்த நாடு வீழ்ச்சி பாதையில்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த புனித நாடு, தற்பொழுது நாள் தோறும் வீழ்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கட்டியெழுப்பப்பட்டு, பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த நாடு, தற்போதைய சூழலில் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதிய முதலீட்டாளர்கள் வருகை
நாட்டில் கைத்தொழிற்துறை எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. அத்துடன், புதிய முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வருவதற்கு முன்வருவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடு இந்த அளவுக்குப் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதியினதும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஆணவம் சற்றேனும் குறைந்தபாடில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தனது வெட்டிப்பேச்சுகளையும் அகந்தையையும் இன்னும் கைவிடாமல் இருப்பது கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு வாக்களித்த பொதுமக்கள்
இந்த அரசுக்கு வாக்களித்த பொதுமக்களால் தற்பொழுது தங்களின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முடிவதில்லை எனவும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது மக்களிடம் இருந்து ஒளிந்துகொண்டு வாழ்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய எவ்வித உருப்படியான திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan