மகிந்தவே மக்களின் தலைவர்! அடித்து கூறும் ஜோன்ஸ்டன்
"மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தோற்கடிக்கப்படவில்லை. அவரே என்றைக்கும் நாட்டு மக்களின் தலைவராக இருக்கின்றார். அவரை மக்களே பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"போரை முடிவுக்குக் கொண்டு வந்து இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவரே மகிந்த ராஜபக்ச. அவரே என்றைக்கும் நாட்டு மக்களின் தலைவராக இருக்கின்றார்.
மக்களின் தலைவர்
அவர் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் என்றாலும் நாட்டு மக்களின் தலைவர் அவரே. மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்படவில்லை. அவர் மக்களின் மனதில் என்றைக்கும் தலைவராக இருக்கின்றார்.
அவருக்கான பாதுகாப்பைக் குறைப்பதன் ஊடாகவோ அல்லது அவரை முன்னாள் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து விரட்டுவதன் மூலமாகவோ மக்களின் மனதில் இருந்து அவரை நீக்க முடியாது என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் தலைவரான மகிந்த ராஜபக்சவை மக்களே பாதுகாப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |