ஊரடங்கு நேரத்திலும் தொடர்ச்சியாக வீதி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் சாலை வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன நாடு முழுவதும் ஆரம்பித்துள்ள அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்கள் உட்பட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் வழமைபோன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக நிறுத்தப்படவில்லை என்று நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போதைய தொற்றுநோய் நிலைமையை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அபிவிருத்தித் திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை சமர்ப்பித்து எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் பணியிடங்களுக்கு திரும்ப முடியும்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள், புதிய களனி பாலம் திட்டம், 5000 கிராமியப் பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டம், 100,000 கி.மீ. அபிவிருத்தி செய்யும் திட்டம் போன்ற அபிவிருத்தித் திட்டப் பணிகள் சுகாதாரத் தரப்பு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
