ரணிலுக்கு ஆதரவளிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தயாரா..!
பொதுஜன பெரமுனவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணிலை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சம்மேளனத்தின் கூட்டம் ஒன்று வார இறுதியில் குருநாகல் நகரத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்ததுடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசேட பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
தேர்தல்
இதன்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் தேர்தல்களில் ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் பிரசன்ன, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த போது எதுவித குறுக்கீடும் செய்யாத ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உரையை சிரித்தபடி செவிமடுத்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் செய்தி வெளிவரத் தொடங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
