நாட்டு மக்களால் தண்டிக்கப்பட்டுள்ள மோசடியாளர்கள்! உண்மையை வெளிப்படுத்திய ஜோன்ஸ்டன்
நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வாக்களித்தளிமையினால், கடந்த ஆட்சியாளர்களான தாங்கள் அனைவரும் தற்போது துன்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கூறியுள்ளார்.
“மக்களால் ஒரு தவறு நடந்துவிட்டது, இப்போது நாம் அனைவரும் துன்பப்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
வரி மோசடி
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது பல வழக்குகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்தமை மற்றும் வரி மோசடி செய்தமை தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
அத்துடன் சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை
இதேவேளை சமகால அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சர்கள் உட்பட முன்னாள் பல அரசியல்வாதிகள் செய்த மோசடிகள் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ளனர்.

அதில் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை வகித்த சிலர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan