அரசாங்கத்திற்கு பெருந்தொகை பணம் நட்டம்! ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகிய மூவரின் கடவுசீட்டுக்களை கையகப்படுத்துமாறும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சதொச பணியாளர்களைக் கடந்த 2010 ஆம் ஆண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்காகப்
பயன்படுத்தி, 59 இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக அரசுக்குப் பண இழப்பை
ஏற்படுத்தியமைக்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட
மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு

குறித்த குற்றப்பத்திகைக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தலா ஒவ்வொருவரையும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளிலும் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam