ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை! மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து- இந்திய அணி
இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து- இந்திய அணிகள் முதல் இன்னிங்சில் 387 ஓட்டங்களை சேர்த்தன.
2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ஓட்டங்கள் அடித்தது.
193 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 170 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததது.
ஜோ ரூட்
இந்த போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் சதம் அடித்தார்.
2ஆவது இன்னிங்சில் 40 ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் 2ஆவது இடத்திலும், ஹாரி ப்ரூக் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் முறையே 5, 8 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
