அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் ஜோ பைடனின் செல்வாக்கு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கோவிட் வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது.
கோவிட் பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை சரிசெய்வது போன்ற ஏராளமான சவால்கள் அவர் முன் இருந்தன. இதில் அவரது நிர்வாகத்தால் கோவிட் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்தியதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,