கடும் பொருளாதார நெருக்கடி! அவசரமாக அமெரிக்க பயணமாகும் பிரான்ஸ் ஜனாதிபதி
ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இம்மானுவல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பொருளாதார நெருக்கடிகள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனி விமானத்தில் பயணித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அங்கு தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் இருவரும் கலந்தாலோசிக்க உள்ளனர்.
ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்கா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.முன்னதாக தனது முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியின் போது மக்ரோன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri