இஸ்ரேலில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா மோசடியில் சிக்கிய பெண்
இஸ்ரேலில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக்கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 53 பேர் செய்த முறைப்பாடுகளுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டாளர்களிடம் இருந்து மாத்திரம் சுமார் 5 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணமோசடி குற்றச்சாட்டு
சந்தேகநபர் தாதியாக வேடமணிந்து ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பணமோசடி மற்றும் பண மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வரகாபொல பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |