கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு(Joe Biden) கடந்த 17ஆம் திகதி கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு, அவருக்கு குறைவான அறிகுறி தென்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
கோவிட் பாதிப்பு
அவரது உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் கோவிட் பாதிப்பில் இருந்து ஜோ பைடன் பூரண குணமடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவரது வைத்தியர் கெவின் ஓ கானர் கூறும்போது, ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan