கனடாவில் வேலை வாய்ப்பை இழக்கவுள்ள ஆயிரக்கணக்கானோர்...!
நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே, இதற்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கலாம்
கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, நிதிப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கல்வித் துறையில் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன.
இந்த பணிநீக்கங்கள், கல்வித் துறையில் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, இந்த பணிநீக்கங்களால், கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை மற்றும் பணித்திறன் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், கனேடிய அரசாங்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், கல்வித் துறையில் பணிபுரியும் மக்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
