காட்டுத் தீயால் உருக்குலைந்த ஹவாய் தீவு: பேரழிவு என ஜனாதிபதி ஜோ பைடன் வேதனை
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா நகரமான மௌய் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 55 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தை அனுப்ப ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வீசி வரும் டோரா சூறாவளியின் தாக்கத்தில் உருவான பலமான காற்று காட்டுத்தீயை மோசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத்தீயை பேரழிவு ஜனாதிபதி அறிவிப்பு
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2 ஆவது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. முக்கிய சுற்றுலா மையமாகவும் விளங்கும் ஹைனாவில் வேகமாக பரவும் தீயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் உட்பட்ட ஏராளமான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.
வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி மாறி உள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 55 ஆக உயர்ந்துள்ளது. தீயில் இருந்து தப்பிக்க பலர் கடலில் குதித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஏராளமானவர்கள் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தை அனுப்ப ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதுடன் ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் அமெரிக்க விமான படை மற்றும் கடற்படை வீரர்களும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



