இஸ்ரேலை விட்டு சாரை சாரையாக வெளியேறும் யூதர்கள்...!
இஸ்ரேலில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் காரணமாக, ஏராளமான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறி வருவதாக இஸ்ரேலியத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டு மாத்திரம் சுமார் 80 ஆயிரம் யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக Central Bureau of Statistics தெரிவிக்கின்றது.
இன்னும் ஏராளமானவர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறி மேற்குலக நாடுகளுக்கு குடிபெயர்வதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இஸ்ரேல் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றார்கள்.
இஸ்ரேல் எதிர்கொண்டு வருகின்ற இந்த ஆபத்துப் பற்றியும், 12 நாள் யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பின் இழப்புக்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...,