நுவரெலியாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்களின் தங்க நகைகள் கொள்ளை
நுவரெலியா (Nuwaraeliya), திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் இருந்த 80 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் தனியே இருந்த போது, மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள், தம்மை நகரசபை ஊழியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து எட்டு இலட்சம் பெறுமதியுடைய இரண்டு தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அதனையடுத்து, இரு பெண்களும் சத்தமிட கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும், அப்பகுதியில் இருந்த எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளின் ஊடாக தப்பி ஓடிய திருடர்களின் மோட்டார் சைக்கிள் பதிவு இலக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், திம்புள்ள - பத்தன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து, நுவரெலியா தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam